இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்காமல் இருப்பதால், கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அனுமதி பெற பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையிலே, கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அடுத்த மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.