முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Fairbank குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

457

நேற்று இரவு ரொரன்ரோ Fairbank குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Eglinton Avenue West மற்றும் Dynevor வீதிப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சுமார் 20 வயது மதிக்கத்க்க ஆண் ஒருவர் சுவாசித்தவாறும், சுயநினைவுடனும் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *