மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியாவும் அவுஸ்ரேலிய அணியும் மோதவுள்ளன.
இன்று (வியாழக்கிழமை) டெர்பி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு மிதாலி ராஜூம், அவுஸ்ரேலிய அணிக்கு லேனிங்கும் தலைமைதாங்குகின்றனர்.
சம பலம் பொருந்திய இவ் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றிபெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 23ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.