தெஹ்ரீக், தலிபான் அமைப்பினரால் பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் தகர்க்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய பாறைச் சிற்பங்களுள் ஒன்றாக இருந்த புத்தர் சிலையை மீண்டும் இத்தாலி நிபுணர்கள் புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.
7 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பாறை புத்தர் சிலையை கடந்த 2007 ஆம் ஆண்டு தெஹ்ரீக், தலிபான் அமைப்பினர் புத்தர் சிற்பத்தின் முகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு துளையிட்டு வெடிபெருட்களை வைத்து பகுதி பகுதியாக தகர்த்தனர். அந் நேரம் உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களையும் எதர்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந் நிலையில் இத்தாலி அரசாங்கம் சுமார் 2.9 மீல்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 6 மீற்றர் பாறை சிற்பத்தை 11 வருடங்களின் பின்பு மீண்டும் வடிவமைத்துள்ளது. தற்போது தலிபான்களை நோக்கி புத்த பெருமானின் சிலை புன்னகைக்கிறார்.
இது தொடர்பாக இத்தாலிய நிபுணர் லுகா மரியா ஆலிவியரி தெரிவிக்கையில், இந்த புத்தர் சிலையை புனர் நிர்மாணிப்பது அவ்வளவு எளிதான விடயல்ல. இருப்பினும் நாங்கள் இதனை புனர் நிர்மாணம் செய்ததன் காரணம் குறித்த அமைப்பினர் ஏற்படுத்தய சேதம் வெளியில் தெரிய வரவேண்டும் என்பதற்காகவே என்றார்.
மேலும் இப் புத்தர் சிலையின் நிர்மாணத்தினால் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அங்கு அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.