விஜய் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது.
எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதே.
வீடியோ
முதல் இரண்டு படங்களில் அட்லீ விஜயின் ரசிகர்களின் பல்சை சிறப்பாக கைபிடித்துப் பார்த்தவர். சிறந்த தயாரிப்பாளர், கைதேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் என்று விஜயுடன் கூட்டணி அமைக்கும் அட்லி, இயக்குநர் சங்கரிடம் கற்ற தொழில் நுட்ப புகுத்தலை சரியாகவே பயன்படுத்துவார்.
காட்சிகளை எந்த இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்வதில் அட்லீ குருவையே மிஞ்சியவர் என்று பெயர் பெற்றவர். அதற்கு தகுந்தார்போல் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜயை கைகோர்த்து முதல் இரண்டு படங்களில் ருசி கண்டவர் மூன்றாவதாகவும் விஜயுடன் களமிறங்கியுள்ளார்.
எதிர் விமர்சனங்களைப் போல் பிகில் படம் மிகவும் மோசமானது என்று கூற முடியாது. 80, 90 களில் ரஜினிக்கு இருந்த அதே இளம் பட்டாளம்போல இன்றைய தலைமுறை இளம் பட்டாளம் விஜய்க்கு உண்டு.
ரஜினியை வைத்து ஆழமான கதையம்சம் கொண்ட படங்களை எடுத்த பாலச்சந்தர், பாரதி ராஜா போன்றவர்களே ரஜினி மிகப்பெஇர்ய நடிகர் ஆனதும் அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானதை கண்டு அவருக்கு நிகரான அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் அளவில் கதை தேர்ந்தெடுப்பதில் திணறினார்கள். இதனாலேயே அவர்களால் ரஜினிக்கு முழு வெற்றியை பிற்காலத்தில் கொடுக்க முடியவில்லை.
இயக்குநர் பாலுமகேந்திராவும் ரஜினியை வைத்து உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை எடுத்து சுட்டுக் கொண்டார். விளைவு, ரஜினி மீண்டும் மசாலா களத்திற்கு வந்தார். அப்போதைய சில புதிய இயக்குநர்கள் ரஜினிக்கு தகுந்த கதையை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றியை கொடுத்தனர்.
அதே நிலைதான் விஜய்க்கும். விஜய் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டுமெனில் ஆழமாக கதையம்சங்கள் எடுபடாது. அதனாலேயே கலர்புல் காட்சிகள், செண்டிமென்ட், ஆடல் பாடல், என முழு கமர்ஷியல் பேக்கேஜ் கொடுக்க அட்லி மிகவும் சரியான ஆள் என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டனர். அதுதான் இன்று பிகிலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் போட்டிக்கு கைதி என்ற படத்தை தவிர வேறு எந்த ஸ்டார் வேல்யு படங்களும் இல்லை என்பதால் வசூலில் பிகில் சாதனை படைத்திருப்பது உண்மையே.